• Wed. Apr 8th, 2026

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் இத படிங்க..!

Byadmin

Dec 13, 2025

(மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் இத படிங்க..!)

மாரடைப்பு என்பது இக்காலத்தில், வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. இதனை உரிய முறையில் கையாளாவிடில், அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். பொதுவாக ஆண்களைத் தாக்கும் இந்த மாரடைப்பு தொடர்பில் நாம் அறிந்திருத்தல் அவசியம்.

அதே வேளை, மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் பெற்று வருபவர்கள் மீண்டும் ஒருமுறை இதனால் பாதிப்படையாதவாறு தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு சில பொருட்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.
அவை என்னவென விரிவாகப் பார்ப்போம்!

01. மருத்துவரின் தொடர்பு எண்
உங்களுக்கு சிகிச்சையளிக்கும் இதய நோய் தொடர்பாக எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறீர்கள் என்பது தொடர்பான விவரங்களை வைத்திருப்பது சிறந்தது.

02. அவசரத் திட்டம்
நீங்கள் தனியாக இருக்கும் சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விட்டால் யாருக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களை சட்டையில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

03. விபரங்கள்
தொடர்பு எண் மட்டுமல்லாது, அதில் சில விபரங்களை எழுதி வைத்திருப்பது மிகவும் அவசியம். மாரடைப்பு ஏற்பட்டு என்ன மாதிரியான மாத்திரைகளை சாப்பிடுகிறீர்கள், இதயத்தில் அல்லது இதய வால்வுகளில் ஏதேனும் ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருந்தால் அவை குறித்த விபரம் போன்றன உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ஆபத்தான சூழலில் மருத்துவர்கள் உங்களுக்கு விரைந்து சிகிச்சையளிக்க முடியும்.

04. ஆஸ்பிரின்
ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் இரத்தத்தின் அடர்த்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இதனால் இரத்த உறைவு ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆனால் உங்களது மருத்துவரிடம் அடிக்கடி ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா என்பதை கேட்டு தெளிவு பெற்றிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *