• Wed. Apr 8th, 2026

அருமையான விரால் மீன் குழம்பு

Byadmin

Dec 14, 2025

(அருமையான விரால் மீன் குழம்பு)

தேவையான பொருட்கள் :

விரால் மீன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
பூண்டுப் பல் – 10
தக்காளி – 2
வெந்தயம் – அரை டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது)
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப் பால் – கால் கப்

தாளிக்க :

நல்லெண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை :

மீனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.

புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.

அடுத்து அதில் நசுக்கிய பூண்டை அதில் சேர்த்து, சிறிது நேரம் வதக்குங்கள்.

பிறகு தக்காளியைச் சேர்த்துத் தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.

அதனுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை குழம்பைக் கொதிக்கவிடுங்கள்.

குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப் பொடி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான விரால் மீன் குழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *