(தினமும் 30 நிமிடங்கள் வெறும் காலுடன் தரையில் நடப்பதால் இவ்வளவு நன்மையா..?)
வெறுங்கால் நடைபயிற்சி என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா? காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் இது.
ஏனைய உடற்பயிற்சிகளைப் போன்று இந்த வெறுங்கால் நடைபயிற்சி மூலம் பல்வேறு நன்மைகள் கிட்டுகின்றது. இந்த உடற்பயிற்சியை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் மேற்கொள்ளலாம்.
இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென பார்ப்போம்!01. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
02. இதயத் துடிப்பை சீராக்குகிறது.
03. நாற்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
04. சோம்பலை நீக்குகின்றது.
05. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
06. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
தண்ணீரிலிருந்து மினரல்கள் மற்றும் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டீ என்பன கிடைக்கப்பெறுவதைப் போல, பூமியிலிருந்து எலக்ரோன்களும் கிடைக்கின்றன. இந்த எலக்ரோன்களும் எமக்கு அவசியம்.
ஆகவே இனிமேல் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது காலணிகள் இல்லாமலேயே மேற்கொள்ள முயற்சியுங்கள். இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.