(இராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம் – சவூதி மன்னர் அதிரடி நடவடிக்கை..!)
சவூதி அரேபியாவில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த தடைகளை நீக்கினார்.
லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், மந்திரிகள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.
இந்தநிலையில் சவூதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதற்கான காரணம் என்ன என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ராணுவதுறை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் தான் உள்ளது. இருந்தாலும் அவர் பணிநீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மன்னர் சல்மான் தான் இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார்.