• Sat. Oct 11th, 2025

அதிகாலை ரன்னிங் பயிற்சிக்குப் பின் இதைத் தான் சாப்பிட வேண்டுமாம்!

Byadmin

Feb 27, 2018

(அதிகாலை ரன்னிங் பயிற்சிக்குப் பின் இதைத் தான் சாப்பிட வேண்டுமாம்!)

 

ரன்னிங் என்பது மிகவும் சவாலான ஒன்று. ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள அதிகப்படியான வலிமை மற்றும் ஆற்றலை பயன்படுத்தப்படும். இந்த பயிற்சியை மேற்கொள்வதால், அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதோடு, இது ஒரு நல்ல மூச்சு பயிற்சியாகவும் இருக்கும். சொல்லப்போனால், ரன்னிங் பயிற்சியை காலை வேளையில் மேற்கொள்வது தான் சிறந்தது.

பலருக்கும் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்ட பின் என்ன சாப்பிடுவது நல்லது என்று தெரியாமல் இருப்பார்கள். உங்களுக்கு அந்த குழப்பம் இருந்தால், இக்கட்டுரையில் அதற்கான விடை கிடைக்கும். ஏனெனில், இக்கட்டுரையில் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்ட பின், காலை உணவாக என்ன சாப்பிடுவது சிறந்தது என கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொண்டு, அவற்றை காலையில் ரன்னிங் மேற்கொண்ட பின் சாப்பிட்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கத் தேவையான ஆற்றல் கிடைக்கும். சரி, இப்போது ரன்னிங்கிற்குப் பின் சாப்பிட ஏற்ற சிறந்த உணவுகள் எவையென்று காண்போமா!

சிக்கன் நெஞ்சுக்கறி

சிக்கன் நெஞ்சுக்கறியில் கலோரிகள் குறைவு என்பதால், இது ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்று. மேலும் இது அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து சமைக்க ஏற்ற ஓர் உணவுப் பொருளும் கூட. ஆனால் இதை காலை உணவாக உட்கொள்ள நினைத்தால், ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளும் முன்பே சமைத்து வைத்துவிட வேண்டும். ரன்னிங் முடிந்த பின் வீட்டிற்கு வந்ததும், வெதுவெதுப்பாக இதை சாப்பிடுங்கள்.

ஏற்கனவே பல கட்டுரைகளில் காலை உணவை முடிந்த அளவு வேகமாக சாப்பிடுவதோடு, அந்த உணவு சற்று ஆரோக்கியமானதாகவும், வயிற்றை முழுமையாக நிரப்பும் படியும் இருக்க வேண்டுமென படித்திருப்பீர்கள். எனவே ரன்னிங் மேற்கொண்ட பின் காலை உணவாக சிக்கன் நெஞ்சுக்கறியுடன் கைக்குத்தல் சாதத்தை சாப்பிடுங்கள். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும். முக்கியமாக சிக்கனில் செலினியம் உள்ளது. இது முதுமையில் வரும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கும்.

சால்மன்

கடல் உணவு என்று எடுத்தால், சால்மன் மீனுக்கு இணை எதுவும் வர முடியாது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை காலை வேளையில் சமைத்து சாப்பிடும் போது, அது ரன்னிங் பயிற்சியால் உடலினுள் ஏற்பட்ட காயங்களில் இருந்து விரைவில் மீளச் செய்யும்.

அதிலும் சால்மன் மீனை, பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். சால்மன் மீன் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி பிரச்சனையைத் தடுக்கும்.

\

வாழைப்பழம்

கார்போஹைட்ரேட் மிகவும் மோசமானது என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. ஆனால் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வோருக்கு அல்ல. ரன்னிங் பயிற்சியை மேற்கொள்பவர்கள், போதுமான அளவு கார்போஹைட்ரேட்டை உட்கொண்டால், ஆற்றலைப் பெறத் தேவையான எரிபொருள் கிடைக்கும். இத்தகைய கார்போஹைட்ரேட் வாழைப்பழத்தில் இருந்து போதுமான அளவு கிடைக்கும்.

அதற்கு வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனைக் கொண்டு மில்க் ஷேக் தயாரித்துக் குடிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் கொழுப்பு இல்லாத பால், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து காலை வேளையில் குடித்தால் பசி அடங்குவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். வாழைப்பழத்தில் தனித்துவமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், ரன்னிங் பயற்சியை மேற்கொள்வோரின் உடலுக்கு வலிமையை அதிகம் கிடைக்கச் செய்யும்.

ஃபுரூட் சாலட்

பழங்கள் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான வைட்டமின்கள் கொண்டது. அதுவும் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்ட பின் பழங்களை சாப்பிடுவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் ஆரஞ்சு, ஆப்பிள், ப்ளாக்பெர்ரி மற்றும் கிரேப்ஃபுரூட் போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மிகவும் அதிகம் மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும்.

பழங்களில் திராட்சை மற்றும் கிவிப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழங்கள் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

காய்கறிகள்

ஒரு தினத்தை ஆரோக்கியமாக ஆரம்பிப்பதற்கு காய்கறிகள் மிகச்சிறந்த காலை உணவாக இருக்கும். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலை வலிமைப்படுத்துவதோடு, தசைகளில் கொழுப்புக்கள் சேராமல் வளர உதவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் காலை உணவாக பசலைக்கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவற்றைக் கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஒருவேளை உங்களுக்கு சாண்விட்ச் வேண்டுமானால், வெள்ளரிக்காய், தக்காளி கொண்டு கோதுமை பிரட் பயன்படுத்தி சாலட் தயாரித்து சாப்பிடுங்கள். வேண்டுமெனில் அத்துடன் புரோட்டீனுக்காக வேக வைத்த முட்டையையும் சேர்த்துக் கொள்ளலாம். பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான செலரி கீரை, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புருஸல்ஸ் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழிக்கும்.

பாதாம்

பாதாமை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கொலஸ்ட்ராலைக் குறைக்கும். பெரும்பாலான ஓட்ட பந்தய வீரர்களுக்கு பாதாம் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். ஆனால் பாதாமை மட்டும் காலை உணவாக சாப்பிட முடியாது அல்லவா. எனவே ஒரு பௌல் கார்ன் ப்ளேக்ஸ் அல்லது மில்க் ஷேக்கின் மீது பாதாமை துருவி தூவி சாப்பிடுங்கள். இன்னும் சற்று ஹெவியாக வேண்டுமென நினைத்தால், ஒரு பௌல் வேக வைத்த பாஸ்தாவுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

பாதாம் சருமத்திற்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தொடர்ச்சியாக உடலுக்கு கிடைக்கும் போது, அதனால் தீங்கு விளைவிக்கும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

ஓட்ஸ்

ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வோருக்கு ஏற்ற ஓர் அற்புதமான உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இதில் புரோட்டீன்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போதுமான அளவில் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதாடு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். உங்களுக்கு ஓட்ஸ் இன்னும் டேஸ்ட்டாக வேண்டுமானால், அத்துடன் விருப்பமான பழங்கள் எதையேனும் சேர்த்து சாப்பிடுங்கள். முக்கியமாக ஓட்ஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

கிரீக் தயிர்

கிரீக் தயிர் மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்கள் 45 நிமிடம் – 1 மணிநேரம் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், கிரீக் தயிர் சாப்பிடுவது நல்லது. இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதிலும் இந்த தயிருடன் பழங்கள் மற்றும் சிறிது பாதாமை சேர்த்து சாப்பிட்டால், இன்னும் ருசியாக இருக்கும்.

கிரீக் தயிரில் உள்ள புரோட்டீன், தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *