• Sat. Oct 11th, 2025

ஆஸ்திரேலியாவில் பழமையான சுறா மீனின் பல் திருட்டு

Byadmin

Mar 14, 2018

(ஆஸ்திரேலியாவில் பழமையான சுறா மீனின் பல் திருட்டு)

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் மிகவும் பழமையான மீனின் பல் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த பல் 2.6 மில்லியனுக்கு முன் வாழ்ந்த சுறா இனத்தைச் சேர்ந்த மீனிடமிருந்து பெறப்பட்டது. மிகப்பெரிய பற்களை கொண்ட இந்த மீன்கள் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளன.

அழிந்துபோன இனமான இந்த மீனின் பல் இரண்டு மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்த பாரம்பரிய தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பூங்காவின் மிக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்த பல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இருக்கும் இடம் சிலருக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கு தெரிந்த நபர்கள் தான் இந்த வேலையை செய்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்லை உடைத்து எடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் திருடனை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *