• Sat. Oct 11th, 2025

பச்சை குத்தியவர் கிருமி தாக்கி மரணம்

Byadmin

Jun 9, 2017

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் காலில் பச்சை குத்திக் கொண்டார்.

பச்சை குத்திய சில நாட்கள் கழிந்த நிலையில் அவரது காலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. எனவே, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடலில் உயிர் கொல்லி தொற்று கிருமி பரவி இருந்தது தெரிய வந்தது. இந்த வகை கிருமிகள் மெக்சிகோ வளைகுடா கடல் நீரில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த கிருமி உடலில் புகுந்து விட்டால் அவை மனிதனின் தசையை சாப்பிட்டு உயிர் வாழும்.

இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உயிரை பறித்து விடும். இந்த கிருமிதான் இவருடைய உடலிலும் புகுந்து இருந்தது.

சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத அளவுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே, சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் உயிர் இழந்தார்.

இவர் பச்சை குத்தி கொண்டதும் மெக்சிகோ வளைகுடா கடல் நீரில் குளித்துள்ளார். அப்போது பச்சை குத்திய காயம் வழியாக கிருமிகள் புகுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அவரை தாக்கிய வைரசின் பெயர் விப்ரியோ வால்னிபிகஸ். இந்த கிருமி தாக்குதலால் அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 100 பேர் வரை உயிர் இழக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *