• Sun. Oct 12th, 2025

புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Byadmin

Mar 20, 2018

(புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்)

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று(20) ஆரம்பமாக உள்ளது.

இன்றிலிருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும். எவ்வாறாயினும் 50 வீதத்திற்கு அதிகமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாத சபைகளில் ஆட்சியமைப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு குறித்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நடத்தப்பட்ட 340 சபைகளில் 169 சபைகளுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *