• Sat. Oct 11th, 2025

காணாமல் போனோரின் உறவுகளுக்கு உதவி வழங்க கிழக்கு முதலமைச்சர் நடவடிக்கை

Byadmin

Jun 11, 2017

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவிகளை  வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் சர்வதேச  செஞ்சிலுவை சங்கத்தினரிடையே  இடம்பெற்றது,

கொழும்பிலுள்ள கிழக்கு முதலமைச்சரின அலுவலகத்தில் இடமபெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச செஞ்சிலுவைச்  சங்கத்தின்   பிரதிநிதிகள் குழுவின்  தலைவரான க்ளெயார் மேட்ரவுட்  (Claire meytraud) மற்றும்  உப  தலைவரான  இர்பான்  சுலெஜ்மானி (irfan sulejmani) ஆகியோர் பஙகேற்றனர்,

 

இதன் போது  காணாமல் போனோரின் உறவுகளுக்கு  உதவியளிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தின்  மூன்று மாவட்டங்களிலும் அவர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு கிழக்கு மாகாணத்துக்கு உதவியளிக்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்  சங்க பிரதிநிதிகள் கிழக்கு முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் தெரிவித்தனர்.

 

அத்துடன் இந்த  அலுவலகங்களினூடாக இலவச  சட்ட ஆலோசனைகளையும் காணாமல்போனோரின்  உறவுகளுக்கு வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்

மேலும்  அவர்களுக்கு  சட்டரீதியான  நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக காணாமல் போனோரின் உறவினர்களை உறுதிப்படுத்தும் விதமான உறுதிப் பத்திரங்களை  வழங்கவும் சரவேதேச  செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஆகியோருக்கிடையிலான பேச்சில்  இணக்கம் காணப்பட்டது,

 

கிழக்கு  மாகாணத்தில்  திருகோணமலை மாவட்டத்தில் 1500பேர் காணாமலபோயுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 240​0 பேரும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 2000 பேரும்  காணாமல்  போயுள்ளனர்.

முதற்கட்டமாக இந்தப் பணிகள் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதனை துரிதப்படுத்துமாறும் கிழக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

எனவே  பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக 50 ஆயிரம் ரூபாவை வழங்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் முன்வந்த போது கிழக்கு முதலமைச்சர் அந்த்த் தொகையை   அதிகரித்து  வழங்க வேண்டுமென  அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

பல வருடங்களாக பல்வேறு  இன்னல்களுக்கு மத்தியிலும் மன  உளைச்சல்களுக்கு மத்தியிலும்  தமது   வாழ்வினை  முன்னெடுத்து வரும் காணாமல்  போனோரின் உறவுகளுக்கான  உதவித் தொகையினை  அதிகரித்து வழங்க  செஞ்சிலுவைச்  சங்கத்தினர்  முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.

 

அணமைக்காலமாக பல்வேறு போராட்டங்களை  முன்னெடுக்கும் நிலைமைக்கு  காணாமல்போனோரின்  உறவுகள் தள்ளப்பட்டுள்ளமை  மிகவேதனைக்குரியது என்பதுடன் அரசாங்கம் அவர்களின்கோரிக்கைகள் தொடர்பில் நியாயமான தீர்வொன்றை வழங்க முன்வரவேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *