(துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி !! – சென்றல் ரோட் பாருக் அவர்களின் மகன்)
மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உரிழந்தவர் சென்றல் வீதி பாருக் அவர்களின் மகன் என அப்பிரதேச வாசி ஒருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு சென்றல் வீதி பிரதேசத்தை சேர்ந்த குறித்த முஸ்லிம் இளைஞர் மாளிகாவத்த பிரதீபா மண்டபம் அருகில் வரவழைக்கப்பட்டு உள்ள நிலையில், சுடப்பட்டு ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.