(நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு..!)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.