• Sat. Apr 4th, 2026

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவிப்பு

Byadmin

Apr 20, 2018

(அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவிப்பு)

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் சர்வதேச பொலிஸாரிற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில், அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யுமாறு பலமுறை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இதுவரை கைது செய்யப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *