(மறுசீரமைக்கப்பட்ட புகையிரத கட்டணம் தொடர்பிலான இறுதி அறிக்கை அமைச்சிக்கு)
மறுசீரமைக்கப்பட்ட புகையிரத கட்டணம் தொடர்பிலான இறுதி அறிக்கை இன்று(20) போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கை அமைச்சின் அனுமதிக்கு பிற்பாடு புதிய கட்டண முறை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 சதவீதத்தில் புகையிரத கட்டணம் அதிகரிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும் ஏலவே அறிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.