• Sat. Apr 4th, 2026

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே இன்று(24) சந்திப்பு

Byadmin

Apr 24, 2018

(ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே இன்று(24) சந்திப்பு)

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிக்க மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரவுள்ள 20ம் திருத்த சட்டமூலம் குறித்து கலந்துரையாட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் இன்று(24) மாலை 05.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் அமையப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் எதிர்வரும் 07ம் திகதி இடம்பெறவுள்ள மே தின நிகழ்வுகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *