(டொலரின் பெறுமதி 159 ரூபாவை தாண்டியது)
டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் இல்லாத அளவு நேற்று 158.69 ஆக அதிகரித்த நிலையில் இன்று 25.04.2018 மேலும் வீழ்ச்சி அடைந்தி 159.04 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி இந்த இன்று டொலர் விற்பனை விலை 159.04 என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இலங்கை நாணயத்தின் மிகப்பெறிய வீழ்ச்சியை இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆண்டு டொலர் ஒன்றிற்கான இலங்கை நாணயத்தின் பொறுமதி 115 ஆக இருந்த அதேவேளை 2015 ஏப்ரல் மாதம் 135 ஆக காணப்பட்டது.