• Sun. Oct 12th, 2025

அமைச்சரவை மாற்றம்… புதிய அமைச்சரவை நியமனம் விபரம் இதோ

Byadmin

May 1, 2018

(அமைச்சரவை மாற்றம்… புதிய அமைச்சரவை நியமனம் விபரம் இதோ)

புதிய அமைச்சரவை நியமனம் 10.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  ஆரம்பமானது.

இந்நிலையில் புதிய அமைச்சரவை விபரங்கள் வெளியாக தொடங்கியுள்ளது.;

கெளரவ. லக்ஷ்மன் கிரிலியல்ல: பொது நிறுவன மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்.

கெளரவ. சரத் ​​அமுனுகம: விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி, மற்றும் மலை நாட்டு பாரம்பரியம் ஆகியவற்றின் அமைச்சர்.

கெளரவ. துமிந்த திசாநாயக்க: நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.

எஸ். பி. நாவின்ன :
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வயம்பா அபிவிருத்தி அமைச்சர்.

மஹிந்த அமரவீர: கமத்தொழில் (விவசாய)  அமைச்சர்.

கெளரவ. கபீர் ஹாஷிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி  மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

கெளரவ. பி ஹரிஸன்: சமூக நிர்வாக அமைச்சு.  ( Minister of Social Empowermen)

கெளரவ. பைஸர் முஸ்தபா: விளையாட்டுத்துறை அமைச்சர், மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்.

தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்.

கெளரவ. ரஞ்சித் மத்துமபண்டார: பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்.

கெளரவ. சாகல ரத்னாயக்க: திட்ட மேலாண்மை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்.

கெளரவ. டி.எம் சுவாமிநாதன்: புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர்.

கெளரவ. விஜித விஜயமுனி சோய்சா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார அமைச்சர்

இந்த  செய்தியுடன் இணைந்திருங்கள்.. இது தொடர்பான மேலும்  புதிய அப்டேட்கள் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *