• Sun. Oct 12th, 2025

ரவி கருணாநாயக்க பொது பல சேனாவுக்கு பணம் வழங்கியது ஏன்?

Byadmin

Jun 13, 2017

இலங்கை முஸ்லிம்களுக்கு சொல்லாத இன்னல்களை வழங்கி வருகின்ற பொது பல சேனா அமைப்பானது யார் என்ற இரகசிய உண்மைகள் இவ்வாட்சியாளர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருடனும் போதிய தொடர்பில் இருந்துள்ளார்கள். அவர்களிடமிருந்தும் பணம் பெற்றுள்ளார்கள் என்ற விடயத்தையும் சில தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் அசாத் சாலி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக் காலத்தில் வீரகேசரி ஊடகத்துக்கு வழங்கியுள்ள பெட்டியில் குறிப்பிட்டுள்ளமை இப்போது சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது.

அசாத் சாலியின் அப்போதைய கூற்றுப்படி பொது பல சேனாவின் பிரதான இயக்குனர் நோர்வேயாகும். அமைச்சர் ராஜித சேனாரத்ன நோர்வே சென்ற போது பொது பல சேனா அமைப்பினர் அங்கிருந்துள்ளார்கள். அமைச்சர் ராஜித ஏன் நோர்வே சென்றார் என்ற வினாவில் பல மர்மங்கள் புதைந்துள்ளன. அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தன ஆகியோர் ஏன் பொது பல சேனாவுக்கு பணம் வழங்கினார்கள் போன்ற விடயங்களை வைத்து சிந்திக்கும் போது பொது பல சேனாவானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவை கவிழ்க்கவும் இன்றைய ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை தெளிவாகிறது.

 

இந்த உண்மைகளை அமைச்சர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாக ஆதாரங்களுடன் கூறி பொது பல சேனாவின் உண்மை முகத்தை சிங்கள மக்களுக்கு அறியப்படுத்தலாம். இவைகள் வெளிப்படும் போது பொது பல சேனாவின் கொட்டம் மிக இலகுவாக அடக்கப்பட்டுவிடும். இந்த சூழ்ச்சிகளில் அமைச்சர் ராஜிதவுக்கும் பங்குள்ள போது அவர் எப்படி இவர்களுக்கு எதிராக செயற்படுவார்.

பொது பல செனாவானது இப்படி ஆட்டம் போடும் தைரியம் அவர்களுக்கு பல பக்கத்திலிருந்தும் பல கட்சிகளிடமிருந்தும் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே சாத்தியமாகும். இப்படி இவ்வாட்சியாளர்களின் முக்கியமானவர்களுடன் பொது பல சேனா அமைப்பானது தொடர்பில் உள்ள போது அவர்களை கைது செய்வது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இவ்வாறான உதவி பொது பல சேனாவுக்கு இருந்தால் அவர் இவ்வாட்சியாளர்களின் அனுசரணையோடு இன்று பொலிஸ் சந்தேகம் கொள்வது போன்று அவர் நாட்டை விட்டும் தப்பிச் சென்றிருக்கலாம். இன்று அவர்கள் நடாத்தி காட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை விட பல மடங்கு செயற்பாடுகளையும் நடாத்தி காட்டுவார்கள் என்பதை எமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

-அ.அஹமட் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *