(இஸ்ரேல் அக்கிரமம் – ஒரேநாளில் 55 பலத்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம்)
காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 55 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் 2700 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது.
ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திற நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.