• Tue. Oct 14th, 2025

பானைப் போன்று வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு இதோ எளிய வழிகள்..!

Byadmin

May 15, 2018

(பானைப் போன்று வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு இதோ எளிய வழிகள்..!)

வயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை எந்நேரமும் அனுபவிக்கக்கூடும். உலகில் ஏராளமான மக்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும். ஆனால் இந்த வயிற்று வீக்கத்தை அடிக்கடி ஒருவருக்கு ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அர்த்தம்.

இங்கு பானைப் போன்று வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், வீங்கி மற்றும் தொங்கி காணப்படும் வயிற்றை வேகமாக தட்டையாக்கலாம்.

உப்பை குறைக்கவும்
உணவின் சுவையை அதிகரிக்க அன்றாடம் உணவில் உப்பைப் பயன்படுத்துவோம். ஆனால் அதிகப்படியான உப்பு , உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, உடலில் உப்பு மற்றும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி, அதன் காரணமாக வயிற்றை வீக்கத்துடன் வெளிக்காட்டும். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட், உப்புமிக்க ஸ்நாக்ஸ் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதை உடனே நிறுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *