(சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை)
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவிருத்தல் வழங்கியுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் சீருடைகள், பாடப்புத்தகங்கள் அழிவடைந்தோ அல்லது சேதமாக்கப்பட்டிருப்பின் அவை தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1988 எனும் இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும். அந்த தகவல்களுக்கமைய குறித்த தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நாடவைக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள, அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பாடப்புத்தகங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் எடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி அமைச்சின் 1988 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு நிவாரணம் தொடர்பில் தகவல்களை வழங்கமுடியும்.