16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்
அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளனர்.
ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படபோவதாக அந்த 16 பேரும் அறிவித்துள்ளனர்.
கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.