• Mon. Oct 13th, 2025

ஆண்களே! தாடியை சீக்கிரம் வளர வைக்க சில இயற்கையான எளிய வழிகள்..!

Byadmin

May 25, 2018

(ஆண்களே! தாடியை சீக்கிரம் வளர வைக்க சில இயற்கையான எளிய வழிகள்..!)

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும்.

அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.

ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில முயற்சிகளின் மூலம் அதன் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த முடியும். நமது வயது, மரபணுவின் அமைப்பு ஆகியவையே தாடி வளர்ச்சியின் அளவையும் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றது. ஆனால் உங்கள் வயதிற்கேற்ற வளர்ச்சியை விட அதிக அளவு தாடியை வளர செய்வதற்கு இயற்கையான பல வழிகள் உள்ளன.

உங்கள் தாடி சீக்கிரமாக வளர்வதற்கு அதை ஊட்டமளித்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்வில் உள்ள மற்ற காரியங்களை போல இதற்கும் நல்ல ஊட்டமளித்தல் மற்றும் தேவையான அளவு கவனிப்பை அதற்கு கொடுத்தல் ஆகிய செயல்கள் சீக்கிரம் வளர உதவும். முகத்தில் உள்ள காய்ந்து போன மற்றும் இறந்து போன திசுக்களை வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர உதவுகின்றது

அதிக அளவு அக்கறையுடன் முகத்தில் உள்ள தாடியையும், முகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கென்று சில எண்ணெய்கள் பயன்படுத்தி தாடிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க மறக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *