(இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி பலி)
எல்லையில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைமை இயக்குனர் ஆசிப் கபூர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில் 1077 முறை எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. எங்களுடைய விருப்பம் எல்லாம் அமைதிதான் என்பதற்காக பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய ராணுவம் கடந்த வாரம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை மீறிய போதும் நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை. இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய போதுதான் நாங்கள் தாக்குதலை நடத்தினோம்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் மதிப்பளிக்க விரும்புகிறது. எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்பதை இந்தியர்கள் உணரவேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும். அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போருக்கு இடமில்லை. என அவர் தெரிவித்தார். #PakistanArmy