(“கட்டார் நாட்டவர்களை வரவேற்கிறோம்” – சவூதி )
தற்போது காணப்படும் வளைகுடா முரண்பாடுகளைப் புறந்தள்ளி ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்கு
கட்டார் நாட்டு மக்களை வரவேற்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறித்தது.
ஜித்தாவிலுள்ள அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்து உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்காக சட்டரீதியாக தம்மைப் பதிவு செய்து கொண்டதன் பின்னர் கட்டார் நாட்டவர்கள் உம்ரா கடமையினை நிறைவேற்ற முடியும்
கட்டாரில் வதியும் வெளிநாட்டவர்கள் உம்ரா கடமையினை நிறைவேற்றுவதாயின் அமைச்சின் இணையத்தளத்தில் தமது தரவுகளைப் பதிவு செய்து, சேவைப் பொதிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதற்காக சவூதியினால் அதிகாரமளிக்கப்பட்ட உம்ரா கம்பனிகளுடன் இலத்திரனியல் உடன்பாட்டுச் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமழானின்போது கட்டார் விமான சேவை தவிர்ந்த அனைத்து விமான சேவைகள் மூலமும் கட்டார் நாட்டவர்களும் அங்கு வதிபவர்களும் ஜித்தாவிலுள்ள அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வரமுடியும் என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
-Vidivelli-