தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரண்டு வார காலப்பகுதியில் குறித்த கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக தபால் மா அதிபர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு வார காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.