(பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு)
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது .
ஆயினும் மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கும் தூதர் நபி அவர்களுக்கும் கட்டுப்பட மாட்டோம், படைத்தவனை விட படைக்கப்பட்டவர்களீக்கே கட்டுப்படுவோம் என்ற வரட்டுகெளரவத்தில் இன்னும் சிலர் இறுக்கின்றதை பலகத்துரை பெரிய பள்ளிவாசலில் இன்றைய தினம் கூடி இருந்த பாமரன் முதல் பட்டதாரி வரையும் ஏழை முதல் பணக்காரர்கள் வரையும் ஏன் அறிவைச் சுமந்தவர்களும் நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் மாத பிறையைப் பார்த்தவரின் உறுதி செய்யப்பட்ட ( அல்லாஹ் மீது சத்தியம் செய்த ) வாக்குமூலத்தையும் உதாசீனப்படுத்திய நிலமை இருந்தது .
ஆயினும் பிறை கண்ட தகவலுக்குறியவர் நம்பத்தகுந்தவர் என்ற நிலையிலும் இன்னும் நாட்டில் பல இடங்களில் பிறை தென்பட்டதட்கான தகவலும் சாட்சியங்களுன் இருப்பதால் சத்தியத்தை விளங்கிய அல்லாஹ்வுக்கும் தூதர் நபி ஸல் அவர்களுக்கும் கட்டுப்பட்டோம் என்றவர்கள் இன்ஷா அல்லாஹ் நோன்புப் பெறுநாளைக் கொண்டாடுவார்கள் .
சத்தியத்துக்கட்டுப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில்
நாங்களும் சேர்ந்திருப்பதட்காக அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக .
இன்ஷா அல்லாஹ் .
M.Faiseen