• Sat. Apr 4th, 2026

பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரித்தன

Byadmin

Jul 6, 2018

(பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரித்தன)

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி ,  தற்போது 137 ரூபாவாக காணப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.
டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.
சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபா என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *