‘அரசாங்கத்தின் பெரும்பான்மை நீக்கப்பட வேண்டும்’ – விமல் வீரவன்ச
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்றைய தினம் (29) கடுவல நகரசபை நகராதிபதி தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இதனைத் தெரிவித்தார்.