இலங்கை திரிபோஷா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷா…
ஜனாதிபதிக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்ப்பார்துள்ளதாக இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோன்!
இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கமைய, பொதுநலவாய…
இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை
சாதாரண பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உரைக்கு ஹர்ஷ MP வரவேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உரையில், இலங்கையை நவீன ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட போட்டித்தன்மை கொண்ட சமூக…
மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் அத்தியவசியம் ; ஜனாதிபதி வெளியிட்ட விஷேட வர்த்தமானி
மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேநீர் விருந்துபசார செலவை பொறுப்பேற்பதாக அறிவித்த ரணில் – கட்டணத்தை தாம் செலுத்துவதாக பாராளுமன்றம் அறிவிப்பு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று -03- உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்குவது நடைமுறை. இதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளதாக ஜனாதிபதி ரணில்…
தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு 47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு மரணம்
கேரள மாநிலத்தில் தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு உயிரிழந்ததாக ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில், “கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த…
இலங்கைக்கு உதவுவதாக UAE உறுதி, ரணிலுடன் தொலைபேசியில் உரையாடல்
இலங்கையில் தற்போது ஏற்படுள்ள நெருக்கடிக்கு உதவி செய்வதற்காக அரபு நாடொன்று முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களைக் கடந்து நிலையான மற்றும் அமைதியான சூழலை அடைவதற்கு உதவுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியான…
ராஜபக்சக்களின் அரசியலை முடிவுறுத்த இயலாது – நாமல்
அரசியல் கிளர்ச்சிகளின் ஊடாக ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவுறுத்திவிட இயலாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல்வாதிகளினதும் எதிர்காலம் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது என…