23 வருடங்களாக சுதந்திர கட்சி சார்பான கூட்டணியிடமிருந்த அதிகாரத்தை SJB கைப்பற்றியது
பெல்மடுல்ல மாரபன பலநோக்கு கூட்டறவுச் சங்கத்தின் அதிகாரமும் ஐக்கிய மக்கள் சக்தி வசம். 23 வருட காலமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பான கூட்டணி வசம் இருந்த குறித்த சங்கம் இம்முறை ஐக்கிய மக்கள் சக்திவசமானது.
200 க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக், கணக்குகளுக்குள் ஊடுருவி அச்சுறுத்திய மாணவன் கைது
இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது. இந்த மாணவன் யுவதிகளின் பேஸ்புக் கணக்கிற்குள் சென்று யுவதிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி அந்த புகைப்படங்களை…
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து, நாடுகளும் கலந்துரையாடுவது முக்கியமானது – ஜப்பான்
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவது முக்கியமானது என ஜப்பான் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஜப்பான் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக ஜப்பான் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
2 கைகளும், ஒரு காலும் இல்லை – உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திபெற்ற மாணவி
எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து, தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி, ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார். எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி…
குடும்பம் ஒன்றின் மாதாந்தம் நுகர்வுக்கான செலவு, ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் வசிக்கும் சாதாரண குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தம் நுகர்வுக்கான செலவு தொடர்பான தகவல்களை புள்ளவிபரவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் நுகர்வுக்கான செலவு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பேராதனை பல்கலைகழகத்தின்…
இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி, அதிகளவில் பிறந்த ஆண் பிள்ளைகள்
இலங்கையில் கடந்த ஆண்டு குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 301707 பிறப்புக்கள் பதிவாகியிருந்ததுடன் 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 284848 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2020 ஆம்…
பல்கலைக்கழகம் செல்ல 171,497 மாணவர்கள் அனுமதி
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 62.9 சதவீதம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு…
விஞ்ஞான பிரிவில், அக்ஸா சித்தியடைந்தார்
புத்தளத்தைச் சேர்ந்த அப்துல்லா பாத்திமா அக்ஸா இம்முறை நடைப்பெற்ற சா.த.உயர் தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் 2.4176 என்ற புள்ளியும் மாவட்ட மத்தியில் 5 ஆம் இடத்தையும் , அகில இலங்கை ரீதியில் 163 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் ஆரம்பகல்வி…
கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்தது.. பாண் 300 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும் ; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தத் தேவையில் 25% மாத்திரமே சந்தைக்கு வெளியிடப்படுவதாக அச்சங்கம் கூறியுள்ளது.…
உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி – அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று…