• Sun. Oct 12th, 2025

Month: October 2022

  • Home
  • அடுத்த வருடம் காத்திருக்கும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள, சகலரும் ஒன்றிணைய வேண்டுமென ரணில் அழைப்பு

அடுத்த வருடம் காத்திருக்கும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள, சகலரும் ஒன்றிணைய வேண்டுமென ரணில் அழைப்பு

2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு…

குறைந்த விலையில் வாகனங்கள் – பொலிஸார் எச்சரிக்கை

குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு…

கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டது

கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.  இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நாளை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை…

பாண் விலை எப்போது குறையும்…?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். நாட்டிலுள்ள…

திருமணத்திற்காக தயாராகவிருந்த பெண் வீட்டாரிடம் கொள்ளை

அளுத்கம பிரதேசத்தில் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகைள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த மகளின் திருமணத்திற்காக தயார் செய்யப்பட்ட தங்க மோதிரம் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சாலியவெவ…

அனைத்து விளை நிலங்களிலும் பயிரிட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்துகிறார்

நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காணி பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (14) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில்…

4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின, அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் தண்ணீரில் மிதப்பு

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தும் வகையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில்…

உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலில், ஐவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்களான பேராசிரியர் மெத்திகா விதானகே, கலாநிதி அனுஷ்கா யு, ராஜபக்ஷ, பேராசிரியர் நீலிகா மாளவிகே, கலாநிதி தனுஷ்க உதயங்க மற்றும் கலாநிதி கே.கே. அசங்க சஞ்சீவ ஆகியோர் 2021 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த…

70 இலட்சம் ரூபாய் பெறுமதியான காரை 25 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடியுமா..?

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயன்ற கார் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். விலையுயர்ந்த கார் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் போவதாக வலான ஊழல் தடுப்புப்…

கோதுமை மாவின் விலை 290 ரூபாவாக விலை குறைக்கப்பட்டது

கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 395 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.