தந்தையும், 2 மகன்களும் சுட்டுக் கொலை – மினுவங்கொடயில் சம்பவம்
மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தந்தை…
இலங்கையர்களுக்கான விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் அறிவிப்பு
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்காகவும், உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காகவும் சமையல் பாடநெறி ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.குறித்த நிறுவனத்தின் தலைவர் சிரந்த பீரிஸ் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியில்…
லிட்ரோ கேஸ் விலை குறைப்பு
இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும். 5 கிலோ எடையுள்ள…
வாழ்க்கைச் செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது – சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்
அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அதன் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர்…
அடுத்த 2 வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைவடையும்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவதற்கேற்ப அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே…
வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி செய்ததில் இலங்கைக்கு 10.24 % ஆல் வருமானம் உயர்வு ; சுங்கத் திணைக்களம் தெரிவிப்பு
2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 10.24 % என்ற ஆண்டுக்கு ஆண்டு விகித்தில் 1,213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆடை, தேயிலை, இறப்பர் சார்ந்த தயாரிப்புகள்,…
இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரித்தன
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு…
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்கத்தின் 29வது பொதுக்கூட்டம்..!
1985 ஆம் ஆண்டின் SLBFE சட்டம் எண் 58 இன் கீழ் இயங்கும் ஒரே அமைப்பான ALFEA இன் உயர்பீட உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு. றிஸ்லி முஸ்தபா அவர்கள் 176 வாக்குகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். 29th AGM of…
புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயர்வு.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வருடாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாவுக்கும்…
கொத்துரொட்டி, பிரைட் ரைஸ், சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும்
கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த…