தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23, 24 ஆம் திகதிகளில்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொழிலதிபரின் மரணத்தில் திடீர் திருப்பம்!
பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலையாளிகள் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் சந்தேகிக்கப்படுகிறது. நேற்று (01) கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான்…
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது…
கொழும்பு பங்கு சந்தை இன்று 12 மணியுடன் நிறைவு
இன்று நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது. நாளை, சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு முறைப்பாடு
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு அளித்த பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது…
இனிமேல் அடிமை தீவு என அழைக்கப்பட மாட்டாது
ஆங்கிலத்தில் ‘Slave Island’ (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கொம்பனித்தெரு என பயன்படுத்துவது தொடர்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவினால் பொதுநிர்வாக,…
புதிய நாணயமும், முத்திரயும் வெளியாகியது
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் கண்டி…
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள்
இலங்கைக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் இலங்கைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுவதற்கு அந்த நிதி உத்தரவாதம்…
கிரிக்கெட் அணியில் சுசந்திகாவிற்கு பதவி
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01…
மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை உறுதி
நாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட…