கடவுச் சீட்டு பெற வருபவர்களுக்கு வழங்கப்படவுள்ள வசதி
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த, நகர அபிவிருத்ததிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மேற்கொண்ட கள ஆய்வுப்…
இலங்கை குறித்து சீனா மற்றும் அமெரிக்கா கலந்துரையாடல்
இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் G20 நாடுகளின் நிதியமைச்சர்களின் சந்திப்பையொட்டி, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான தூதுக்குழு அளவிலான கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது. கடன் நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை…
உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள்
எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. உலக விவசாய அமைப்புடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே குறிப்பிட்டார். கடந்த பருவத்தில் இறக்குமதி…
தேர்தல் இடம்பெறும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இதோ
தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்…
கொரியா செல்ல 85 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 7 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கோர விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த காரில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக்…
கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன நியமனம்
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சீதாவாக்கை ஒடிஸ்ஸி ரயில் சேவை ஆரம்பம்
´சீதாவக்க ஒடிஸ்ஸி´ ரயில் சேவை இம் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
புதிய கிரிக்கெட் யாப்பு – 10 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!
இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண தண்டனை குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!
இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை…