பென்சிலில் வாக்களித்தவரா நீங்கள்?
தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை!சில வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை…
வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்ததாக…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துஹெர பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்டவிரோத மதுபானம் தொடர்பில்…
புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம்- 3 பேர் பணி இடைநீக்கம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய தலைமை ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக…
புதிய தூதுவர் நியமனத்துக்கு அனுமதி
குவைத் நாட்டிற்கான புதிய இலங்கை தூதுவரை நியமிக்க பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குவைத்துக்கான புதிய இலங்கை தூதுவராக ஏ.எல். ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் கடந்த 18ஆம் திகதி கூடிய உயர் அதிகாரிகள்…
பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என…
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம்
கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். “விசாரணை முடிவடைந்து இறுதி…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட அறிவிப்பு
மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள மாணவர்கள் செப்டெம்பர் மாதம் 23ம் திகதி முதல் தங்களுடைய விடுதிகளுக்கு…
கொழும்பை உலுக்கும் காசநோய்!
கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள…
சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை!
17.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்காக சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை ஒன்றை எட்டியுள்ளது. அதனூடாக குறித்த கடன் தொகையின் தற்போதைய மதிப்பில் இருந்து 40.3% தள்ளுபடி பெறுவது சிறப்பம்சமாகும். இதன் மூலம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க கடன்…