இப்படியும் ஏமாற்றுகிறார்கள் – விழிப்பாக இருக்கவும்
யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குப்பிழான் வடக்கு பகுதியில் கட்டட விற்பனைப் பொருள் நிலையமொன்றை நடத்திவரும் 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார்.…
டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க…
தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வௌியானது
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார். 2000…
இலங்கை வந்த அவுஸ்திரேலியா அணி
‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு நாட்டை வந்தடைந்தது. துபாயில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர்கள் துபாயிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெறும் இந்த…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – 132 பேர் கைது
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களில் 27% அதிகரிப்பு காணப்படுவதாக பணியகத்தின் பிரதி…
உலர்ந்த திராட்சையில் கிடந்த பல்லி!
கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் வீடியோ ‘அத தெரண’வுக்குக் கிடைத்தது. இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த…
யோஷித ராஜபக்ஷ கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு…
இன்றைய வானிலை
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்…
அதிக விலைக்கு அரிசி விற்பனை – இரவிலும் சுற்றிவளைப்பு
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, இன்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் அதிகாரிகள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதிக…
மன்னார் காற்றாலை திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம்
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை…