• Sat. Oct 11th, 2025

மன்னார் காற்றாலை திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம்

Byadmin

Jan 24, 2025

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு…

திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை அதானி மறுக்கிறது

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை. இத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம். மே 2024இல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய ஜனவரி 2, 2025 அன்று இலங்கை அமைச்சரவை எடுத்த முடிவு, குறிப்பாக ஒரு புதிய அரசாங்கத்துடன், அவற்றின் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் எரிசக்தி கொள்கைகளுடன் விதிமுறைகள் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும். இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதானி தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

— பேச்சாளர், அதானி குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *