அமெரிக்காவில் ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.…
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுப்பனவு
கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இழப்பீடு…
காலி டெஸ்ட் : உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம்
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியின் 2ஆவது நாளான…
சுதந்திர தின நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில் வெகுவிமர்சையாகவும் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் இம்முறை சுதந்திர தினநிகழ்வை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாக,…
இருள் சூழ்ந்த கொழும்பு வானம்!
நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு இன்று (30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐ தாண்டியிருந்தாலும், நாட்டின்…
ஹோட்டல் வரவேற்பாளரை நீச்சல் தடாகத்திற்குள் தூக்கி வீசிய வெளிநாட்டினர்
வாத்துவ பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், நீச்சல் தடாகத்தில் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் நீந்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வரவேற்பாளரை, போலந்து நாட்டினர் குழுவொன்று நீச்சல் தடாகத்திற்குள் தூக்கி வீசிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹோட்டல் வரவேற்பாளர் இரவுப் பணியில் இருந்தார்,…
சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதொசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு விசேட விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா…
சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்!
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன…
இன்றைய வானிலை
நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று…
மத்திய வங்கி விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும்…