• Sat. Oct 11th, 2025

அமெரிக்காவில் ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து

Byadmin

Jan 30, 2025

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.

கன்சாஸிலிருந்து வந்த விமானத்தில் பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் பயணித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான பிளாக்ஹாக் ஹெலிகொப்டரில் மூன்று அதிகாரிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும் போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகொப்டருடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *