கனடாவுக்கு பாய முயன்ற யாழ்.ஜோடி கைது
போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். கணவருக்கு…
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் உயிரிழந்தார். மித்தெனிய, கடேவத்த சந்தி பகுதியில்…
மார்ச்சில் அரச சொகுசு வாகனங்கள் ஏலத்தில்
அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியாக வந்தார் ஜனாதிபதி
2025 ஆம் ஆண்டுகான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. பட்ஜெட்டை சமர்ப்பிப்பதற்காக சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார தனியாவே வருகைதந்தார். அவரை படைகல சேவிதர் அழைத்துவந்தார். இதற்கு முன்னர் நிதியமைச்சர்கள், வரவு- செலவுத்திட்டத்தை…
பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையம்
பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹர்ஷவுக்கு ஜனாதிபதி கிண்டல் பதில்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் தற்போது 2025 ஆம் ஆ ண்டுக்கான வரவு-செலுத்திட்டத்தை சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றார். அப்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ஏதோ கூறினார். கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, என்ன ஹர்ஷ, நீங்கள் கேட்பதை நான் எப்படி…
எம்.பிக்களுக்கு வாகனங்கள் இல்லை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை. அதேபோல, அனுமதிப்பத்திரமும் வழங்கப்படாது.
துறைமுக நெரிசலுக்கு நீண்டகால தீர்வு…
துறைமுக நெரிசலுக்கு நீண்டகால தீர்வு காண நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டில் ஒரு தேசிய தர மேலாண்மை அமைப்பு தேவை. எங்கள் இலக்கை அடைய இந்த ஆண்டு ரூ. 750 மில்லியன் ஒதுக்குகிறோம்.
கல்வி, சுகாதாரத்துறைக்கு எப்போதுமில்லாதளவுக்கு ஒதுக்கீடு
கல்வி, சுகாதாரத் துறைக்கு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எப்போதுமில்லாதளவுக்கு உயர்ந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றி வருகின்றார்.