விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள, தேர்தல் ஆணைக்குழு
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும்…
வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயருகிறது
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடம் இலங்கை விடுக்கவுள்ள கோரிக்கை
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது. இலங்கை மீதான பரஸ்பர தீர்வை வரியை 44 சதவீதமாக அதிகரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இலங்கையில் பெரும்…
இலாபமீட்டிய மின்சார சபை
மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை மின்சார சபையின்…
வெற்றிலையுடன் தம்பி
முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் நேற்றையதினம் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இந்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில்…
நீச்சல் தடாகத்தில் மரணம்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14.04) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர்…
சவூதிக்குச் செல்லும் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 22 அன்று சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என சர்வதேச ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஏப்ரல் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை மட்டுமே இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அவசர கோரிக்கையை விடுத்துள்ள மின்சார சபை
அவசர கோரிக்கையை விடுத்துள்ள மின்சார சபை மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக நாளை (13) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3 மணி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை…
நடுக்கடலில் பிடிபட்ட 200 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்
மேற்கு கடற்கரையில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று (12) கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்…