• Sun. Oct 12th, 2025

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள, தேர்தல் ஆணைக்குழு

Byadmin

Apr 15, 2025

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் அணைக்குழு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

சமாதான நீதிபதிகளால் பிறப்புச் சான்றிதழ்களை சான்றளிப்பது மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல சுயேச்சைக் குழுக்களிடமிருந்து பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

அதன்படி, மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பிரிவுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மீண்டும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டது.

இதற்கமைய அந்த வேட்புமனுக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்த அரசியல் கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ஆணைக்குழு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *