நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி
நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று (30) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளான். மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி இன்று
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று (30) நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (31) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது. பொது நிர்வாகம், மாகாண…
சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்…
2026 வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு
2026 ஆம் வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 27ஆம் திகதி வர்த்மானி அறிவித்தலொன்றை வௌியிட்டு அரசாங்கம் விடுமுறை தொடர்பான விபரங்களைக் குறிப்பிட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன,…
ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்
பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட நெதுச தத்சர பெர்னாண்டோ என்ற 3 வயது சிறுவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளான். (30) சிறுவனின் சித்தியின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்காக மாலமுல்ல பகுதியில் உள்ள விகாரை…
நாட்டில் 18 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார…
3 மாதங்களேயான குழந்தை உயிரிழப்பு
யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், உடற்கூற்று பரிசோதனை குறித்த குழந்தை…
36 மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம்…
பொம்மைக்குள் போதைப்பொருள் : இத்தாலிய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று அதிகாலை 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த போதைப்பொருளை…
பல பகுதிகளில் திடீர் மின் தடை
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) இரவு ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.