மசூதிகளில் ஒலிபெருக்கி தடை: பாங்கு ஓதுவதை ‘அசான்’ செயலியில் கேட்கலாம்
இஸ்லாமிய மக்கள் வீட்டில் இருந்தபடியே, பாங்கு ஓதுவதை கேட்கும்படியான ‘அசான்’ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர்களால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது…
உக்கிரமடையும் தாக்குதல் – 85 பேர் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் நேற்று (30) கடுமையான தாக்குதலினால் பாதிக்கப்பட்டன. காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்…
அதிவேக நெடுஞ்சாலையில் Seat belt அணிவது கட்டாயம்!
2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி…
பஸ் கட்டண திருத்தம் – 2 நாட்களில் முடிவு!
எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம்…
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள தகவல்!
இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரை பெறப்பட்ட மொத்த பணப்பரிமாற்றங்கள் 3.1 பில்லியன்…
லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,100 ரூபாவிற்கும், 5 கிலோ…
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு…
எரிபொருள் விலை அதிகரிப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய…
பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்…
கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவர் மீது குழுவொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என்றும் மற்றையவர் 27 வயதுடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.