(மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்)
துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.
அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், அண்மையில் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.
உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.