(அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ; ஆகஸ்ட் 17 கொழும்பில்)
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரியஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜனஇளைஞர் முன்னணி என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைஏற்பாடு செய்துள்ளது.
இதுவரையில் கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான மக்கள்கூட்டமொன்றை இதன்போது கூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டத்தை நடக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதற்காக எதிர்வரும் 17 ஆம்திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னரேஅறிவிக்காதிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.