(பேலியகொடை பகுதியில் தீ விபத்து)
பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.