• Sat. Oct 11th, 2025

ரமழான் மாதத்தில் மிம்பரில் துஆ

Byadmin

Jun 16, 2017

فقد صح في السنة أن النبي صلى الله عليه وسلم صعد المنبر وقال : «آمين ، آمين ، آمين» وفي رواية : صعد رسول الله المنبر فلما رقي عتبة قال : «آمين» . ثم رقي أخرى فقال : «آمين» . ثم رقي عتبة ثالثة فقال : «آمين» 

قيل : يا رسول الله! إنك صعدت المنبر فقلت : آمين ، آمين ، آمين . فقال : «إن جبريل عليه السلام أتاني فقال : من أدرك شهر رمضان ، فلم يغفر له ، فدخل النار ؛ فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين ، ومن أدرك أبويه أو أحدهما ، فلم يبرهما ، فمات ، فدخل النار ؛ فأبعده الله ، قل : آمين . فقلت : آمين ، ومن ذكرت عنده ، فلم يصل عليك ، فمات ، فدخل النار ؛ فأبعده الله ، قل : آمين . فقلت : آمين» .

قال العلامة الألباني رحمه الله : (حسن صحيح / صحيح الترغيب:1679 

நபி (ஸல்) அலைஹி வசல்லம் அவர்கள் மிம்பரில் முதல் படியில் ஏறும் போது ஆமீன் என கூறினார்கள். பிறகு அடுத்த படியில் ஏறிய போதும் ஆமீன் என கூறினார்கள். பிறகு மூன்றாம் படியில் ஏறும் போதும் ஆமீன் என கூறினார்கள். நபிகளாரிடம் வினவப்பட்டது : யா ரஸூலுல்லாஹ் நீங்கள் மிம்பரில் ஏறும் போது ஆமீன், ஆமீன், ஆமீன் என கூறினீர்களே, அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து “யார் ரமழான் மாதத்தை அடைந்தும் தனக்கு மன்னிப்பு பெறவில்லையோ அவன் நரகம் நுழையட்டும், அல்லாஹ் அவனை தூரமாகுவானாக என கூறி ஆமீன் கூறுங்கள் என்றார், நான் ஆமீன் கூறினேன். யார் தன் பெற்றோர் அல்லது அவர்களின் ஒருவரையோ அடைந்து அவர்களுக்கு உபகாரம் செய்யாமல் மரனித்தானோ அவன் நரகம் நுழையட்டும், அல்லாஹ் அவனை தூரமாகுவானாக என கூறி ஆமீன் கூறுங்கள் என்றார், நான் ஆமீன் கூறினேன். யாரிடத்தில் உங்களை ஞாபகப்படுத்தி உங்கள் மீது சலவாத் சொல்லாமல் மரனித்தானோ அவன் நரகம் நுழையட்டும், அல்லாஹ் அவனை தூரமாகுவானாக என கூறி ஆமீன் கூறுங்கள் என்றார், நான் ஆமீன் கூறினேன் என்று அறிவித்தார்கள்.

(அல்லாமா அல்பானி, ஸஹீஹுத் தர்கீப் 1679)

இந்த ஹதீஸில் நாங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களை தரப்படுத்துகிறேன்.

1: இந்த துஆவை கேட்டவர் மலக்குகளில் முக்கியமானவரும், வஹீயை கொண்டு வருபவருமான ஜிப்ரீல் (அலை) அவர்கள்.

2: இந்த துஆவிற்கு ஆமீன் கூறியவர் அகில உலகத்துக்கும் அருளாக அனுப்பப்பட்ட முன்,பின் பாவம் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள்.

இவ்விரண்டுமே துஆ அங்கீகரிக்கப்படுவதற்கு போதுமானவை.

துஆவில் நாட்டம் என்ன?

1: ரமழானில் மன்னிப்பு பெறாதவன் எனின் மன்னிப்பு கேட்பவனல்ல அந்த மன்னிப்பு அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதியானதாகவும் அமைய வேண்டும். வெருமனே வாயினால் மன்னிப்பு கூறிவிட்டு அதே பாவத்தில் தொடர்வதல்ல. அதே போன்று துஆ அங்கீகரிக்கப்படுவதற்கு எங்கள் செயல்களும், உறவுகளும் சரியாக இருக்க வேண்டும். நாங்கள் கேட்கும் தவ்பா அங்கீகரிக்கப்பட்டது என்ற திருப்தியை அடைவதே அது ஏற்றுக்கொல்லப்பட்டதற்கு சான்றாகும்.

2: பெற்றோருக்கு உபகாரம் செய்யாமல் வாழ்வது. அவர்கள் எந்த நிலமையில் இருப்பினும் அவர்கள் சுக, துக்கத்தை விசாரித்து அவர்களுக்கு உருதுனையாக இருப்பதும், அவர்கள் மணம் நோவும் படி நடந்துக் கொல்லாமலிருப்பதும் மிக முக்கியம். அவர்கள் மணதளவில் எங்களுக்காக பிரார்த்திப்பதே நாங்கள் அவர்களுக்கு உபகாரம் செய்வதாகமையும்.

3: நபி (ஸல்) அவர்களின் பெயர் சொல்லப்பட்டும் சலவாத் சொல்லாமலிருப்பது. இறை தூதரைப் பற்றி பேசப்படும் இடத்தில் அவருக்காக சலவாத் கூறுவது அவசியமாகும். எவ்வாறு பெற்றொருக்கு உபகாரம் செய்வதும், ரமழானில் தவ்பா செய்வதும் மிக முக்கிய செயல்களொ அதே போன்று நபி (ஸல்) அவர்கள் மீதும் சலவாது சொல்லுவதும் முக்கியமாகும்.

இவைகளுக்கு தண்டனையாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறியது நரகம் நுழையட்டும் இன்னும் அல்லாஹ் அவர்களை தூரமாகுவானாக.

வேறொரு அறிவிப்பில் நாசமடைவானாக என வந்துள்ளது.

ரமழான் மாதத்தில் பெற்றொருக்கு உபகாரம் செய்யாமலும், நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் சொல்லாதவனது நிலமையும் மிக கைசேதமே.

ஏனெனின் அவன் இரண்டு அல்லது மூன்று துஆவையும் உள்வாங்குகின்றான்.

பெற்றொருக்கு உபகாரம் செய்யததும், அதே சமயம் அவன் ரமழானில் எவ்வாறு மன்னிப்பு வழங்கப் பட்டவனாக இருப்பான். இன்னும் நபி (ஸல்) அவர்கள் மீது சலவதையும் சொல்லாமலிருப்பின் அவன் மூன்று பாவங்களையும் ஒரே நேரத்தில் செயதவனாகிறான்.

அல்லாஹ் நம் அனைவரயும் இந்த பாவங்களை விட்டு பாதுகாத்து, ரமழானில் பிரயோசனம் பெற்று நேர்வழி அடைய அருள் புரிவானாக.

தாரிக் நிஸார் (ஷரபி, அஸ்ஹரி) BA Hons

Special in Islamic Da’wah 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *