• Sat. Oct 11th, 2025

பாதுகாப்புக்களும், கண்காணிப்புக்களும் மரணத்தை தடுப்பதில்லை…

Byadmin

Sep 25, 2025

மைக்கல் ஜாக்சன் 150 வயது வரை வாழ வேண்டும் என்று கனவு கண்டுவந்தார். .

அவரது தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை தினமும் அவரைப் பரிசோதிக்க 12 மருத்துவர்களை அவர் தனது வீட்டில் நியமித்து வைத்திருநஅதார்.

அன்றாடம் ஒவ்வொரு உணவுக்கும் முன், அவர் எடுக்கும் உணவுகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவரது அன்றாட உடலியல் வழக்கத்தை மேற்பார்வையிட 15 நிபுணர்களை நியமித்திருந்தார்.

தூக்கத்தின் போது ஆக்ஸிஜனை ஒழுங்குபடுத்தும் நோக்குடன், சிறப்பு தொழில்நுட்பத்துடனான ஒரு படுக்கை அவருக்காக செய்யப்பட்டிருந்தது.

தேவைகள் ஏற்பட்டால் தங்கள் உறுப்புகளை அவருக்காக தானம் செய்யத் தயாராக உள்ளவர்களின் பட்டியலை கைவசம் வைத்திருந்தார். மட்டுமன்றி அவர்களுக்காக விசேஷ மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படு வந்தன.

இந்த ஏற்பாடுகள் எல்லாமே 150 வயது வரை வாழ வேண்டும் என்ற அவரது மாபெரும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால்…

ஜூன் 25, 2009 அன்று, 50 ஆவது வயதில், அவரது இதயம் திடீரென நின்றுவிட்டது.

25 ந்து வயதில் இருந்து மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஜாக்சன் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஆனாலும் மரணம் அவருக்காக 50 ல் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தது.

ஜாக்சன் மரணத்துக்கு சவால் விட்டார். ஆனால் மரணம் ஜாக்சனுக்கு சவால்விட்டது.

மனிதன் மண்ணில் எவ்வவளவுதான் வெற்றிகள் கண்டாலும், மரணத்திடம் அவன் தோல்வி காண்பது அவனது பலவீனங்களில் ஒன்றாகும்.

இதனைத்தான் புலவர் அபுல் அதாஹியா பின்வருமாறு வர்ணிக்கிறார்:

பாதுகாப்புக்களும், கண்காணிப்புக்களும் மரணத்தை தடுப்பதில்லை!

மானிடமோ, ஜின் இனமோ மரணத்தை வென்றதில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *