( கூட்டு எதிரணியுடன் கலந்துரையாடவுள்ளோம் ; அமைச்சர் ஹக்கீம்)
தேர்தலை நடத்தாமல் காலத்தை கடத்தும் அரசாங்கத்தில் சில கட்சிகள் முன்னெடுத்துள்ள சூழ்ச்சியை தோற்கடிக்க எதிர் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற அக்கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
தேர்தலை நடத்தாமல் காலத்தை கடத்தும் அரசாங்கத்தில் சில கட்சிகள் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
இந்த சதிகளை முறியடிக்க எதிர் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைல் ஈடுபடவுள்ளோம். எதிர்வரும் வாரம் கூட்டு எதிர்கட்சியுடன் கலந்துரையாடவுள்ளதோடு எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம் என குறிப்பிட்டார்.
தாங்கள் போட்டியிடார ஒரே ஒரு தேர்தல் ஜனாதிபதி தேர்தல் என்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி எவரும் வெல்ல முடியாது தேர்தல் ஜனாதிபதி தேர்தல் அவர் அவர் குறிப்பிட்டார்.